ராஜமௌலியின் சேலஞ்சை ஏற்க மறுத்த இயக்குநர்... ரசிகர்கள் கடும் விமர்சனம்
சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு மரக்க் கன்று நடும் சேலஞ்ச் விடுத்தார். அதை ஏற்று விஜய் மரக்கன்றை நட்டார்.
இந்நிலையில், கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற மரக் கன்று நடும் திட்டத்தில் தெலுங்கு சினிமா உலகினர் ஆர்வமுடன் ஈடுபட்டுகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் பிரமாண்ட பட இயக்குநரும் ஆர். ஆர்.ஆர் படத்தை இயக்கி வருபவருமான ராஜமௌலி இந்த கிரீன் இந்தியா திட்டத்தில் சரண், இயக்குநர்கள் வினாயக் பூரி ஜெகன், ராம் கோபால் வர்மா ஆகி சேலஞ்ச்-ஐ ராம் ஆகியோருக்கு சேலஞ்ச் செய்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ராம் கோபால் வர்மா, எல்லாவற்றையும் சர்சைக்குள்ளாக்குவதுபோல் இதற்கு பதிலளித்துள்ளார். அதாவது, நான் பசுமைகளுக்குள் உலவுவதில்லை, குறிப்பாக மரக்கன்றுகள் என்னைப் போன்ற சுயநலவாதிகளுக்கு ஏற்றதல்ல நீங்கள் நட்டுள்ள மரக்கன்றுகளுக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு ராஜமௌலியின் ரசிகர்கள் கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.