Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோல்வி அடைந்தால் கேட்கக்கூடாது; பின்வாங்கிய கேப்டன் ரோகித்

Rohit Sharma
Last Updated: செவ்வாய், 6 மார்ச் 2018 (14:12 IST)
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா, எந்த அணி வெற்றிப்பெறும் என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

 
இலங்கை, இந்தியா, வங்க தேசம் ஆகிய அணிகள் இடையே இலங்கையில் முத்தரப்பு டி20 போட்டி நடைபெறுகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மா கூறியதாவது:-
 
இந்த போட்டி தொடரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிக என்று நான் சிந்திக்கவில்லை. 20 ஓவர் போட்டியை பொறுத்த வரையில் ஒரு ஓவரில் கூட ஆட்டத்தின் போக்கு மாறலாம். இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி போல் டி20 போட்டியிலும் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.
 
அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கும் வீரர்களின் பலத்தை பரிசோதிக்க இந்த போட்டி தொடர் நல்ல வாய்ப்பாகும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :