1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohit sharma troll answer for pitch issues

எங்க ஊரு.. எங்க பிட்ச்.. அப்படித்தான் விளையாடுவோம்! – மூக்கை உடைத்த ரோகித் ஷர்மா!

Cricket
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் பிட்ச் சாதகமாக இல்லை என இங்கிலாந்து வீரர்கள் பேசியுள்ளதற்கு ரோகித் ஷர்மா பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற விகிதத்தில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பிட்ச்கள் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக உள்ளதாகவும் இங்கிலாந்து வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள ரோகித் ஷர்மா “அந்தந்த நாட்டு பிட்சுகள் அவரவர் தேவைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டுள்ளன. வேறு நாடுகளுக்கு நாங்கள் செல்லும்போதும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறோம். வீரர்களின் திறமையை பற்றிதான் பேச வேண்டுமே தவிர பிட்ச்சை பற்றியல்ல. வேண்டுமானால் ஐசிசியிடம் பேசி உலகம் முழுவதும் எல்லா பிட்சுகளும் ஒரே மாதிரியாக இருக்கம்படி வடிவமைக்க புதிய சட்டம் கொண்டு வர சொல்லலாம்” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள நடராஜன்!