வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (09:53 IST)

இந்திய அணிக்கு எளிய இலக்கு… மூன்றாவது டெஸ்ட்டில் ஆறுதல் வெற்றி பெறுமா?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலால நிலைகுலைந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கெட்களும், அக்ஸர் படேல் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 264 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக அதிரடியாக ஆடிய பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஷுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். 

இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய நியுசிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்திய ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 147 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.