செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (19:01 IST)

ஐபிஎல் சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு – கங்குலி பெயரை விட்ட ரவி சாஸ்திரி!

ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதற்காக பிசிசிஐ, வீரர்கள் அனைவரும் கடுமையான விதிமுறைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடரை பல்வேறு தடைகளுக்கு இடையில் சிறப்பாக நடத்தி முடித்த ஜெய்ஷா, பிரிகேஷ் படேல் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு அவர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.