1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (12:14 IST)

சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் டூப்ளஸி: தோனிக்கு என்ன ஆச்சு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடருவது சந்தேகம் தான் என சஞ்சய் பங்கர் தகவல். 

 
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக அணியில் புதிய வீரர்கள் பரிந்துரை, அணியிலிருந்து சில வீரர்களை நீக்குதல் ஆகிய நடவடிக்கைகளை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடருவது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர், 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன்சி பொறுப்பை அடுத்தவர்களிடம் ஒப்படைக்கவே தோனி விரும்பினார். நேரம் வந்ததும் கோலியிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு இந்திய அணியில் வீரராக தொடர்ந்தார். 
 
அதேபோல தோனி இந்த முறை சென்னை அணியை வழிநடத்தி செல்லும் வாய்ப்பை டூப்ளஸியிடம் வழங்குவார் என நான் நினைக்கிறேன். எனக்கு தெரிந்து தோனிக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்தும் திறன் டூப்ளஸியிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.