1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:37 IST)

அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறிய அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு? வெளியான விவரம்!

உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளான பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு அணிகள் லீக் போட்டிகளோடு வெளியேறியுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இப்போது அரையிறுதிக்கு செல்லாமல் லீக் போட்டிகளோடு வெளியேறிய அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம் வெளியாகியுள்ளது. லீக் போட்டிகளில் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு அணிக்கு தலா 35 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாகவும், அரையிறுதிக்கு தகுதி பெறாத போதும் கூடுதலாக 80 லட்ச ரூபாயும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 2 கோடியே 20 லட்ச ரூபாயும், ஆப்கானிஸ்தானுக்கு 2 கோடியே 20 லட்ச ரூபாயும், இங்கிலாந்து அணிக்கு ஒரு கோடியே 80 லட்ச ரூபாயும், இலங்கை, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு தலா ஒரு கோடியே 10 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.