வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (07:29 IST)

9 பவுலர்களை பயன்படுத்திய இந்திய அணி… கோலி, ரோஹித் ஷர்மா அபார பவுலிங்!

உலகக் கோப்பையின் இறுதி லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் இன்று தீபாவளிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி மாதிரி நெதர்லாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து துவம் செய்தார்.  அவர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். இதில், 5 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடக்கம். கே எல் ராகுலும் 64 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 410 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 250 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி சார்பாக பூம்ரா, சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பார்ட் டைம் பவுலராக கோலி, ஷுப்மன் கில் , சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் ஷர்மா என நான்கு பேரை பயன்படுத்தியது. இதில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் 9 பவுலர்களை இந்திய அணி பயன்படுத்தியது. உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அதிக பவுலர்களை பயன்படுத்திய அணிகளில் ஒன்றாக இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.