Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி ஏன் விலகினார் தெரியுமா?


Abimukatheesh| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (18:06 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி நேற்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி நேற்று தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஒரு வீரராக விளையாட தயாராக இருப்பதாகவும் தோனி அறிவித்தார்.
 
இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இதுபோன்ற முடிவுகளை ஒருநாள் இரவில் எடுக்க முடியாது. இதுநன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட இதுதான் சரியான தருணம் என்று கருதிய தோனி, நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
 
வரும் காலத்தில் உலக கோப்பைக்கான அணியை உருவாகியுள்ளதாக தோசி நினைத்திருக்க கூடும். அவரைப் பொறுத்தவரை அணியின் நலன்தான் முக்கியம், என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :