புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:34 IST)

இது அவுட்டா…? கே எல் ராகுல் விக்கெட்டால் கிளம்பிய சர்ச்சை!

16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் முதலில் பேட் செய்துவரும் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே எல் ராகுலின் கேட்ச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கே எல் ராகுல் எதிர்கொண்ட பந்து அவரது பேட்டருகே செல்லும்போது பேட் அவரது கால் பேடிலும் பட்டுள்ளது. இதனால் அது கேட்ச்சா அல்லது பேட் கால்மட்டையில் பட்டபோது எழுந்த சத்தமா என உறுதிப்படுத்த முடியாத சூழல் இருந்தது. அதனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்குதான் நடுவர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவுட் கொடுத்தது தற்போது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.