திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (09:14 IST)

கே எல் ராகுலுக்கு கொரோனா தொற்று… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகல்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே எல் ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென விலகினார். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து இப்போது குணமாகி அணியில் இணைந்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தொடரான வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.