1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:25 IST)

சரியான கம்பேக்… 5 மாதங்களுக்குப் பிறகு முதல் சர்வதேச் போட்டி… அசத்திய ரவீந்தர ஜடேஜா!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா, நாக்பூர் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய ஜடேஜா அதன் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் இப்போது மீண்டும் உடல்தகுதியைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் அவர் உடல்தகுதியை நிரூபிக்க விளையாடினார். இந்த போட்டியில் பேட்டிங்கில் 15 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், பவுலிங்கில் 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

அதையடுத்து இன்று நடந்துவரும் ஆஸி அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச்க் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜடேஜா முதல் போட்டியிலேயே தனது முத்திரையைப் பதித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸி. அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி நிலைகுலைந்தது.