திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (16:14 IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. டி 20 உலகக்கோப்பை அணி ஹீரோ அறிவிப்பு!

தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்களான முதல் T20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில், குறிப்பாக இறுதிப் போட்டியில் அந்த டென்ஷனான ஓவரை மிஸ்பாவுக்கு வீசி வெற்றியை சாதித்த வேகப்பந்து வீச்சாளர் ஜொகிந்தர் சர்மா.

ஆனால் அதன் பின்னர் சர்வதேசப் போட்டிகளில் அவரால் பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது ஜொஹிந்தர் சர்மா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.