1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:34 IST)

தர்மசங்கடத்தோடு எதிர்கொண்ட சஞ்சய் மஞ்சரேக்கர்…. ஜடேஜா சொன்ன கூல் பதில்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை கடுமையாக விமர்சனம் செய்தவர் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர்.

ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையின் போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தூக்கியும் மற்ற அணிகளை மட்டம் தட்டி பேசுவதாக மஞ்சரேக்கர் மேல் குற்றச்சாட்டு உண்டு. மேலும் அவர் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என சொல்லி கேலி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஜடேஜாவும் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். அதன் பிறகு அதில் ‘ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் நான் சொன்ன pits and pieces என்ற வார்த்தைய அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை’ எனக் கூறியுள்ளார். இதனால ஜடேஜா ரசிகர்கள் மஞ்சரேக்கரைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜாவிடம் உரையாடினார். அந்த உரையாடலை தொடங்குவதற்கு முன்பாக அவர், “என்னோடு பேசுவதற்கு நீங்கள் தயாரா? “ எனக் கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பேசிய ஜடேஜா “கண்டிப்பாக” என கூலாக பதில் சொன்னார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.