திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:07 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டி… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் வெளியான நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகஸ்ட் 28ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன.

இந்த தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மேலும் முதல் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால்  அடுத்த சுற்றில் 2 முறை மோத வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் குறைந்த நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடக்க உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையம் மூலமாக விற்பனை செய்யபப்ட்டது. இந்நிலையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்பனை ஆகியுள்ளன. அதிகப்படியான பயனர்களால் இந்த இணையதளமே சில நிமிடங்களுக்கு முடங்கியது. ஆனால் இந்த போட்டி தவிர மற்ற போட்டிகளுக்காக டிக்கெட்கள் பெரியளவில் விறபனை ஆகவில்லை. அந்த போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.