2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத் தேதி பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்க உள்ளது. இதில் சுமார் 590 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட உள்ளனர்.