வந்ததும் அவுட் ஆன கோலி; நின்று ஆடும் ரஹானே! – பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
நியூஸிலாந்து எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கோலி அவுட் ஆனார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து இடையே நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ஆட்டம் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களம் இறங்கிய விராட் கோலியும், ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில் 44 ரன்களிலேயே விராட் கோலி அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ரஹானே நிதானமாக விளையாடு சதம் அடித்தார். தற்போது 117 ரன்களில் ரஹானே விக்கெட் இழந்த நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.