திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:19 IST)

58 ஆயிரமாக குறைந்துள்ள தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்துள்ள வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 58 ஆயிரமாக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,98,81,965 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,576 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,86,713 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,98,81,965 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 7,29,243 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 27,66,93,572 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.