Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டாஸ் போடும் முறை தேவையா? ஐசிசி தீவிர ஆலோசனை!

Last Modified வியாழன், 17 மே 2018 (14:14 IST)
கிரிக்கெட் போட்டியின் போது எந்த அணி பேட் செய்ய வேண்டும் எந்த அணி பவுல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய பல காலமாக டாஸ் போட்டி வருவது வழக்கமானது. 
 
ஆனால், தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது போல டாஸ் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க ஐசிசி தீவிர ஆலோசனையில் உள்ளது. 
 
இது குறித்து வெளியாகியுள்ள செய்திகல் பின்வருமாறு, டாஸ் போடுவதன் மூலம் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று ஒருதலைபட்சமான முடிவுகள் ஏற்படுகின்றன என்று ஐசிசி கருதுகிறது.
 
அதாவது உள்நாட்டு அணி வாரியங்கள் சூழ்நிலைமையை தங்களுக்கு சாதகமாக உருவாக்கி கொள்வதால் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் வேறு வழியின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் டாஸ் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது. 
 
ஆகவே டாஸ் போடாமல், உள்நாட்டு அணி அல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிரணி கேப்டன் நேரடியாக பவுலிங்கா பேட்டிங்கா என்பதை முடிவு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய ஐசிசி ஆலோசித்து வருகிறதாம். 
 
2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் இதனை பரிசோதனை செய்யப்போவதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதில் மேலும் படிக்கவும் :