வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (10:26 IST)

கோலியிடமும் பாபர் ஆசாமிடமும் ஒற்றுமையை பார்க்கிறேன் – மூத்த வீரர் கருத்து!

தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான பாப் டூ பிளெசிஸ் பாபர் ஆசாமை கோலியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியின் கோலி என வர்ணிக்கப்படும் இவர் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அவர் குறித்து பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு ப்ளெசிஸ் ‘பாபர் ஆசாமிடமும் கோலியிடமும் சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன். அசாம் கடந்த ஒரு வருடமாக அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. அவர் டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற உடல்வாகை பெறவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் அவர் இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.’ எனத் தெரிவித்துள்ளார்.