1.5 மில்லியனுக்கு தோனி; ஒன்னுமில்லாமல் போன நான்: தினேஷ் கார்த்திக்!
சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று தினேஷ் கார்த்திக் வருத்தம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது இந்திய அணியின் சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர். அதாவது அவர் அவர் அவர்களது சொந்த மண்ணிற்கு விளையாடினர்.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன் என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, 2008 ஐ.பி.எல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன்.
எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் சி.எஸ்.கே கேப்டனா? இல்லையா? என்பது தான். ஆனால் தோனி சென்னை அணிக்காக 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று கூறினார். மேலும் சென்னைக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.