“கிரிக்கெட் மீதான காதலை வைத்து மளிகை சாமான் கூட வாங்க முடியாது…” வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓபன் டாக்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்த முறை உலகக்கோப்பை தகுதி சுற்றில் தோற்று வெளியேறியது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தகுதி போட்டிகள் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் தகுதி பெற தகுதி தவறிவிட்டது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும், இதுபோல தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டேரன் சமி “இந்திய வீரர்களுக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் கொடுக்கப்படும் சம்பளம் மிகப்பெரிய அளவில் வேறுபாடு உடையது. இதனால் பல சர்ச்சைகள் எழதான் செய்யும். கிரிக்கெட் மீதான காதலுக்காக விளையாடிய காலம் எல்லா, இப்போது இல்லை. அந்த காதலை வைத்து மளிகை பொருள் கூட வாங்க முடியாது” எனக் கூறியுள்ளார்.