Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!

r
Last Modified வியாழன், 10 மே 2018 (16:40 IST)
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் பால் நேற்று உடல் நல குறைவால் மரணமடைந்துள்ளார்.
 
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் பால் தனது 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் 1964ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்காக ஒரேயொரு போட்டியில் விளையாடினார். 
 
அதன் பின்னர் அவர் இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி 337 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். அதில் 23 முறை ஐந்து விக்கெட் வீழ்த்தியது அடங்கும்.
c
 
டெல்லி அணிக்காக மோதிய ரஞ்சி டிராபி போட்டியில் அவரின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டேராடூனில் உள்ள அவரது வீட்டில்  மரணமடைந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :