Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருமணி மரணம் குறித்து ஏன் பேசவில்லை? - கஸ்தூரி காட்டம்

Last Modified புதன், 9 மே 2018 (15:58 IST)
காஷ்மீரில் மரணமடைந்த திருமணியின் மரணம் குறித்து தமிழக அரசியல் தலைவர் ஏன் வாய் திறக்கவில்லை என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
சென்னையை சேர்ந்த திருமணி என்ற இளைஞர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற போது,  பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதலில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி சில நிமிடங்களில் மரணம் அடைந்தார்.
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி அவரின் டிவிட்டர் பக்கத்தில் “திருமணியை கல்லெறிந்து கொன்ற மூர்க்கர்களை கண்டித்து நம்ம தலைவர்கள் யாரும் வாயே திறக்காதது ஏன்? காஷ்மீர் தீவிரவாதிகளை, தேசத்துரோகிகளை விமர்சித்தால் தமிழ்நாடு முஸ்லிம்களின் வெறுப்பை  பெறவேண்டி வரும் என்ற கணக்கா? என்றால், நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதை விட இழிவுபடுத்தமுடியாது” என பதிவிட்டுள்ளார்.
 
இவரின் கருத்திற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :