1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (16:28 IST)

லேட்டாக வைரலான போட்டோ: இந்தியா - பாக். சுவாரஸ்யம்

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது. 
 
போட்டியின் போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவை ஹாங்காங் அணியோடு தோல்வி அடைந்ததற்காக கேலி செய்தனர். ஆனால், போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி ரசிகர்கள் பாகிஸ்தான் அணியினரை கேலி செய்தனர். 
 
ஆனால், தற்போது இந்திய வீரரான யுவேந்திர சாஹல், பாகிஸ்தான் வீரரான உஸ்மான் கானின் ஷூ லேசைக் கட்டிய போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சாஹல், உஸ்மானின் ஷூலேசைக் கட்டும் புகைப்படத்தை இரு நாட்டு ரசிகர்களும் ஒன்று சேர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.