1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (16:26 IST)

இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா

இந்திய விமானப் படைக்கு அதிநவீன பாதுகாப்பு தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.


நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க ரஷ்யாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு போன்ற ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் பட்சத்தில் பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பின்பு அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை(சிஏஏடிஎஸ்) சட்டத்தின் கீழ் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த வரிசையில் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள சீனாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார தடை (சிஏஏடிஎஸ்) சட்டத்தின்படி ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் மீது ஏற்கனவே அமெரிக்கா இத்தடையை கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.