வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (21:23 IST)

ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு !

asia cup
ஆசிய கோப்பை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   இன்றுடன் லீக் சுற்று முடிவடையும் நிலையில், ஏ பிரிவில் இன்று நடக்கும் 6 வது போட்டியில், பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி,  நிஜாகத் தலைமையிலான  ஹாங்காங்குடன் மோதி வருகிறது.

இப்போட்டியில் பாகிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா என்பது இன்றைய போட்டியில் தெரியும். தற்போது, டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிஜாகத் பந்து வீச்சுத் தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த  பாகிஸ்தான் அணியில் ரிஷான் 78 ரன்களும், சாமன் 53 ரன்களும், ஷா 35 ரன்களும் எடுத்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தன் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து, ஹாங்காங்கிற்கு 194 ரனகள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.