ஓயாத உலகக்கோப்பை சர்ச்சை.. வெற்றி முடிவை மாற்ற ஐசிசி கூட்டத்தில் விவாதம்!!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (10:06 IST)
பவுண்டரின் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியை தீர்மானிக்கும் முறையை மாற்றுவது குறித்து விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்பதை அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் சர்ச்சையான விமர்சனங்களும் வெளியாகின. 
இந்த முறையை நீக்க வேண்டும் என முன்னாள வீரர்களும் கருத்து தெரிவித்த நிலையில், அனில் கும்ப்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கமிட்டி இதை மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி  விவாதிக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மானேஜர் ஜியாஃப் அலர்சைஸ் தெரிவித்துள்ளார். 
 
அதாவது, பவுண்டரி முறையில் வழங்கப்பட்ட முடிவு பெற்றி புகார் எழுந்தததால் அதை மாற்றுவது குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :