திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (16:15 IST)

ஜி.வி.பிரகாஷ் படத்தை வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாள மயம்’. இதில் அபர்ணா பாலமுரளி  ஜிவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் முழுக்க லைவ் சிங்க் சவுண்ட் எனப்படும் டப்பிங் இல்லாமல் நேரடி ஒலிப்பதிவில் உருவாகியுள்ள படம்.  நேரடி ஒலிக்கலவையாக உருவாக்கப்பட்டவுள்ள  இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. 
 
இந்நிலையில் 90-க்களில் பலரின் ரோல் மாடலான சுழற்பந்து வீச்சு வீரர் "அனில் கும்ளே" ஜிவி பிரகாஷின் படத்திற்கு வெகுவாக பாராட்டியுள்ளார்.
 
இன்னும் ரிலீஸாகாத இந்த படம் வருகிற 31ம் தேதி ஜப்பானில் நடக்க இருக்கும் டோக்கியோ இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட இருக்கிறது.