நான் டக் அவுட் ஆனது யுவ்ராஜுக்கு சந்தோஷம்… அபிஷேக் ஷர்மா பகிர்ந்த தகவல்!
ஐபிஎல் தொடரில் தனது பேயடி அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்ற அபிஷேக் ஷர்மா தற்போது இந்திய அணிக்குட் தேர்வாகி ஜிம்பாப்வே தொடரில் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆனார்.
ஆனால் இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா நின்று அதிரடியாக விளையாடி 47 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை அடித்து விளாசி அவுட் ஆனார். இதன் மூலம் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
அதன் பின்னர் பேசிய அவர் நான் சமீபத்தில் எனது ஆலோசனையாளர் மற்றும் பயிற்சியாளர் யுவ்ராஜ் சிங்கிடம் பேசினேன். நான் டக் அவுட் ஆனது குறித்து அவர் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இது ஒரு நல்ல ஆரம்பம் என்றார். இப்போது நான் சதமடித்திருப்பது அவருக்குக் கூடுதல் பெருமையாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்காக கடந்த ஆறு மாதகாலமாக அவர் கடுமையாக உழைக்கிறார். கிரிக்கெட்டுக்கு வெளியேயும் அவர் எனக்காக அவர் நேரத்தை செலவிடுகிறார்” எனக் கூறியுள்ளார்.