1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:31 IST)

விடாது தொடரும் அதிரடி ஆட்டம்… அபிஷேக் சர்மா சாதனை சதம்!

ஐபிஎல் தொடரில் தனது பேயடி அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்ற அபிஷேக் ஷர்மா தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகி ஜிம்பாப்வே தொடரில் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து ஆச்ச்ர்யப்படுத்தினார்.

அதன் பின்னர் தன்னுடைய அதிரடியான இன்னிங்ஸ்களால் தற்போது இந்திய டி 20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக தனது இடத்தை நிரந்தரமாக்கியுள்ளார்.இந்நிலையில் தற்போது நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் அவர் 28 பந்துகளில் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். 

பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடிவரும் அவர் 29 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து கலக்கியுள்ளார். இதன் மூலம் அவர் அதிவேகமாக டி 20 போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக ஆடிவரும் அபிஷேக் ஷர்மா அடுத்த ரோஹித் ஷர்மா என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.