Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இயேசு பிறப்பின் செய்தி நமக்கு கூறுவது...!

Jesus birth
கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட  மெசியா என்றும் நம்புகின்றனர்.
பெத்லகேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. யோசேப்புக்கு மனைவியாக  நியமிக்கப்பட்ட மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னியின் மகனாய் இயேசு பிறந்தார். எனவே இயேசு  கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார் என்பதே நம்பிக்கையின் செய்தி.
 
இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன்முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. ‘அப்பொழுது குழந்தையை முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்’ என்பதே செய்தியாகியது. அதே வேளையில் வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியதைக் கண்ட வான சாஸ்திரிகள், மேசியா அதாவது, இரட்சகர் பிறந்துள்ளார் என்பதை அறிந்து, ஏரோதுவின் அரச மாளிகைக்கு குழந்தையைக்  காணச் சென்றனர். 
 
இந்தப் பிறப்பின் செய்தி நமக்கு இன்று கூறுவது என்னவென்றால் ஏழை-பணக்காரன், ஆண்டான்-அடிமை, ஆண்-பெண், வெள்ளை-கருப்பு சாதிய வேறுபாடுகள் என்றும், இனம், மொழி என்ற நிலையில் வன்முறைக் கலாசாரங்கள்  நிலவி வரும்  சூழலில், அனைத்து மக்களும் ஒற்றமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும்  என்பதே ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :