Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கால்பந்து வீரர்களுடன் ஏரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: 30 பேர் மூழ்கி பலி


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:50 IST)
உகாண்டாவில் ஏரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, நீரில் மூழ்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
உகாண்டாவில் உள்ள ஆல்பர்ட் எனும் ஏரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. ஏரிக்குள் நிறுத்தப்பட்டிருந்த படகில் உள்ளூர் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட சுமார் 45 பேர் கலந்து கொண்டனர். 
 
ஏரிக்குள் நிறுத்தப்பட்டிருந்த படகில் இருந்தவர்களில் நடனமாடியும், மது அருந்தியும் விழாக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாரா விதமாக படகின் ஒரு முனைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வர, படகு நீரில் மூழ்கியது.
 
இந்த விபத்தில் சிக்கி சுமார் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அப்பகுதி மீனவர்கள் 15 பேரை மீட்டுக் கரையேற்றினர்.


இதில் மேலும் படிக்கவும் :