வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள்...!!

கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே  நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது.
குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் போதிய இடைவெளியில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.  இல்லாவிட்டால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
 
கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு செல்லும்போது 2-3 வித்தியாசமான பழங்களை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம்,  ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்த பழங்கள். 
 
பழங்களை முடிந்தவரையில் அப்படியே கடித்து சாப்பிடுவது தான் சிறந்தது. பொதுவாக பழங்களை எப்போதும் வெளியே செல்லும் போது வெட்டி எடுத்துச் செல்லக் கூடாது. அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அறவே  வெட்டக்கூடாது. இவ்வாறு நறுக்கிய பழங்களை சாப்பிடுவதால் எளிதில் வயிறு நிறைவதோடு, உடல் வறட்சியை தடுக்கலாம். 
 
வெளியே செல்லும் கர்ப்பிணிகள் எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். இதனால் நீர் வறட்சியை தவிர்க்கலாம். 
 
கர்ப்பிணிகளுக்கு உலர் பழங்கள் உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. குறிப்பாக வேலை அதிகமாக இருக்கும் போது, இதனை வாயில் போட்டு  மெதுவாக மென்று சாப்பிட வசதியாக இருக்கும். 
 
கர்ப்பிணிகள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். எனவே எப்போதும்  கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்துக் கொள்வது நல்லது.