வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தொப்பை போடுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்...!!

தினமும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகளவு சேர்த்து கொள்ளவும். குறிப்பாக ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால் தொப்பையும் குறையும் உடல் எடையும் குறையும்.
கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளை தினமும் அதிகளவு உட்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக ஜங்க் புட் ஆன நொறுக்கு தீனிகள், பீசா, பர்கர் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.
 
தினமும் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். குறிப்பாக பொட்டாசியம் குறைப்பாடு இருந்தால் தொப்பை போடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
 
தினமும் உணவில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதாவது ஓட்ஸ், பிரெளன் பிரெட் மற்றும் ரொட்டி போன்றவற்றை தினசரி உண்டு வந்தால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விட முடியும்.
 
எப்போதும் உணவை ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். அப்போது தான் தேவையான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் சேரும்.
 
நீர்ச்சத்துள்ள பழங்களை தினமும் அதிகளவு சாப்பிட்டு வரவும் அதாவது தர்பூசணி, பேரிக்காய் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துவதோடு தொப்பை வராமல் இருக்கவும் உதவுகிறது.
 
தினமும் ஒரு மணி நேரம் வரை சைக்கிள் ௐட்டி வந்தால், உடல் எடையையும் குறைக்க முடியும். தொப்பையும் போடாது.