பிரபல ஹிந்தி பாடகர் மாரடைப்பால் மரணம்

VM| Last Updated: புதன், 28 நவம்பர் 2018 (12:20 IST)
பிரபல ஹிந்தி பாடகர் முகமது அஜீஸ் விமானநிலையத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் காரிலேயே திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
 
பிரபல ஹிந்தி பாடகர் முகமது அஜீஸ் கொல்கத்தாவில் இசைநிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பைக்கு விமானத்தில் வந்துள்ளார். விமான நிலையத்தில் இறங்கி காரில் ஏறி வீடு நோக்கி சென்று கொண்டிருந்த அவருக்கு . திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை உடனே நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் அதிகம் பாடல்கள் பாடியுள்ளார் முகமது அஜீஸ். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :