1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : புதன், 10 மே 2023 (16:46 IST)

ஒரு படத்துக்கு இத்தனை கோடியா? ஐஸ்வர்யா ராயின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்துப்போன ரசிகர்கள்!

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் இருவர் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் என்று பொன்னியின் செல்வன் வரை நடித்து இருக்கிறார். 
 
இவர் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள். ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செலவன் படத்தில் குந்தவகையாக நடித்திருந்த மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 
 
ஐஸ்வர்யா ராய்க்கு மொத்தம் ரூ.800 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 வரை சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஒரு நடிகை இவ்வளவு தொகை வாங்குவதை இந்திய சினிமாவே வாய்பிளந்து பார்க்கிறது.