ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 10 மே 2023 (12:00 IST)

சீமானுக்கு முன் வேறு நடிகரை டேட்டிங் செய்த விஜயலட்சுமி... நிச்சயதார்த்தம் கூட முடிந்ததாம்!

'பிரண்ட்ஸ்' எ‌ன்ற த‌மி‌ழ் பட‌த்‌தி‌ல் அ‌றிமுகமாக நடிகை விஜயலட்சுமி, சென்னை சாலி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், புகார் அளித்து  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார். 
 
இந்த சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த பிரச்சனை காரணமாக விஜயலட்சுமி தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இணையம் வாயிலாக வைத்து வருகிறார்.  இதனால் இணைய நாம் தமிழர் தம்பிகள் விஜயலட்சுமி மேல் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் விஜயலக்ஷ்மி சீமானுக்கு முன்பே ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் சுஜன் லோகேஷ் என்பவரை டேட்டிங் செய்து திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றதாகவும். பின்னர்  சில காரணங்களால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.