மகளிடம் எல்லை மீறிய ஷாருக்கான்? திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

Last Updated: வியாழன், 5 ஜூலை 2018 (18:40 IST)
பாலிவுட் பிரபலங்கள் எப்போதும் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சில சமயம் அவர்கள் வெளியிடும் சில புகைப்படங்கள் சர்ச்சைகளில் கொண்டு போய் முடித்துவிடும். 
 
இப்போது அந்த மாதிரியான சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். ஷாருக்கான் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
 
அதில் இரு புகைப்படமாக தனது மகள் சுஹானாவுடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தை ஷாருக்கானின் கன்னத்தில் சுஹானா முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படமும் ஒன்று. 
 
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா? இது பார்ப்பதற்கு நன்றாகவா உள்ளது என விமர்சித்து உள்ளனர். சிலர் இது மாதிரி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்றும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :