காஜலின் அந்த இடத்தில் கை வைத்த சக நடிகை - சர்ச்சைக்குள்ளான பாரிஸ் பாரிஸ்!

Last Updated: சனி, 22 டிசம்பர் 2018 (19:47 IST)
காஜல் அகர்வாலின் மார்பை பிடிப்பது போன்ற காட்சிகள் – சர்ச்சைக்கு உள்ளாகும் பாரிஸ் பாரிஸ் ட்ரைலர்


 
இன்று வெளியான பாரிஸ் பாரிஸ் ட்ரைலரில் காஜல் அகர்வாலின் மார்பை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. இந்த காட்சிக்கு  சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை காஜல் அகர்வாலை ஒருவர் காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகு காஜல் தனியாக பாரிசுக்கு ஹனிமூன் செல்கிறார்.
 
பாரிஸில் அவர் செய்யும் அலப்பறைகள் செம காமெடியாக காட்டப்பட்டுள்ளன. இந்த டீசரில் ஒரு காட்சியில் பெண் ஒருவர் காஜலின் மார்பகத்தை பிடித்து அழுத்துகிறார். அதற்கு அவர் ஷாக் ரியாக்க்ஷன் கொடுக்கிறார்.
 
டீசரில் இடம்பெற்றுள்ள இந்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும், டீசரின் இறுதியில் உடலுறவு சம்பந்தப்பட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, பாரிஸ் பாரிஸ் என்ன மாதிரியான படம் என்ற கேள்விகளை எழுப்பி சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் குடும்பப்பாங்கான கதைகளை தேர்வு செய்த காஜல் பேமிலி ஆடியன்ஸ்களுக்கு பேமஸ் ஆனார் பிறகு கிளாமர் ரோல்களில் நடித்தாலும், காஜலுக்கு நிறைய பேமிலி ஆடியன்ஸ் இன்னும் இருக்கிறார்கள். 
 
இப்படி இருக்க அவர் இதுபோன்ற சர்ச்சையான காட்சிகளில் நடித்து அந்த ரசிகர்களை இழக்கப்போகிறார் என திரைத்துறையினர் கவலை கொண்டுள்ளனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :