1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2021 (20:14 IST)

"நாட்டியம்" மூலம் தெலுங்கு ரசிகர்களை ஈர்க்க போகும் புதிய நடிகை!

பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு. பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
 
புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஷ்ரவண் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.
 
பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திரு.தில்ராஜூ ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசரை தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.
 
தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் முறையாக நடனம் கற்று சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.