வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (18:46 IST)

சலோ ஜீத்தே ஹெய்ன்: மோடியின் பால்ய வாழ்க்கையை தழுவிய குறும்படம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வாழ்க்கையை தழுவிய குறும்படமாக சலோ ஜீத்தே ஹெய்ன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் பல பிரபங்களுக்கு மும்பையில் சமீபத்தில் திரையிடப்பட்டது. 
32 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு மங்கேஷ் கடவாலே இயக்கியுள்ளார். மகாவீர் ஜெயின் மற்றும் புஷன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நரு என்ற சிறுவன் கதாப்பாத்திரம் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையிலிருந்து தழுவி சித்தரிக்கப்பட்டுள்ளது. 
ரயில் நிலையத்தில் தேனீர் விற்பது, விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்க்கையை வாழ்வது என மோடியுடன் தொடர்புடைய நிறைய விஷயங்கள் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
பாஜக மூத்த தலைவர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பியூஷ் கோயல், சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி, அக்‌ஷ்ய் குமார், கங்கனா, அஜய் பிரமால், குமார் மங்கலம் பிர்லா, சஜ்ஜன் ஜிண்டால், உதய் ஷங்கர், தீபக் பாரிக், கௌதம் சிங்கானியா, மோதிலால் ஓஸ்வால், பிரசூன் ஜோஷி ஆகியோர் குறும்பட திரையிடலில் கலந்துக்கொண்டனர்.