1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (12:02 IST)

பதான் படத்திற்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்; மாலில் பேனர் கிழிப்பு!

Pathan
குஜராத்தில் ‘பதான்’ படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் திரையரங்கில் பேனர்களை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் ‘பதான்’. இந்த படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியானது. அதில் ’பேஷரம் ரங்’ என்ற பாடலில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடையில் வந்ததற்கு இந்து அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்தன.

அதை தொடர்ந்து பதான் படத்தை தடை செய்யக்கோரி இந்து அமைப்புகள் பல மாநிலங்களிலும் சர்ச்சை செய்து வருகின்றன. மேலும் பதான் படத்தை திரையிட்டால் திரையரங்கை கொளுத்துவோம் என பல திரையரங்குகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் கர்ணாவதி பகுதியில் உள்ள மால் ஒன்றில் பதான் படத்தின் ப்ரோமோஷன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திடீரென குவிந்த பஜ்ரங் தள் அமைப்பினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிட்டவாறு வந்து பதான் படத்தின் பேனர்களை கிழித்து கலவரம் செய்துள்ளனர். பின்னர் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதான் படத்தை வெளியிடுவதில் பிரச்சினை எழுமா என்பது குறித்து படக்குழு கவலையில் உள்ளதாக தெரிகிறது.

Edit by Prasanth.K