ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:17 IST)

இது அது இல்ல… சிங்கள பாடலைக் காப்பி அடித்தாரா அனிருத்? – ட்ரோல்களில் சிக்கிய தேவரா செகண்ட் சிங்கிள்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் ‘தேவரா’ படத்தில்  ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஜான்வி கபூர். வில்லன் வேடத்தில் இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் அக்டோபர் 10 ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ஐந்துமொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இனிமையான மெலடி பாடலான ‘பத்த வைக்கும்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த பாடல் வைரல் ஹிட்டான சிங்கள பாடலான ‘மனிகே மஹே’ வின் மெட்டை காப்பியடித்து லேசாக பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக அனிருத் பாடல்கள் வெளியாகும் போது இதே போன்ற குற்றச்சாட்டுகள் வருவதும் வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.