செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (13:24 IST)

மிரட்டுனா பயந்துடுவனா? ஒருத்தனையும் விடமாட்டேன்: நடிகை கங்கனா தடாலடி

என் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் ஒருத்தனையும் விடமாட்டேன் என நடிகை கங்கனா ரனாவத் அதிரடியாக பேசியுள்ளார்.
ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார்.
 
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள கங்கனா மிரள வைத்திருக்கிறார் என பலர் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த கர்ணி சேனா என்ற அமைப்பினர் மணிகர்னிகா திரைப்படத்தில் ஜான்சிராணியை தவறாக சித்திரித்திருப்பதாக எங்களுக்கு தெரிகிறது. ஆகவே எங்களுக்கு ஒரு முறை படத்தை போட்டுகாட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என படக்குழுவினருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆனால் இதற்கெல்லாம் அசராத கங்கனா, நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை, தணிக்கை குழுவின் அனுமது பெற்ற பின்னரே படத்தை வெளியிடுகிறோம். யாரும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யாராவத்து படத்திற்கு தொல்லை கொடுக்க நினைத்தால் அவர்களை கூண்டோடு அழித்துவிடுவேன் என கர்ணி சேனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.