முதல்வரின் மகளை கடத்த போவதாக மிரட்டல் மெயில்: பெரும் பரபரப்பு

Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (08:02 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தபோவதாக அவருக்கு வந்த மிரட்டல் மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்தாவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில் இவரது அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒரு மெயில் வந்தது. அதில் உங்கள் மகள் ஹர்ஷிதாவை கடத்த போகிறோம் என்றும், அவரை முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த மிரட்டல் மெயிலை அடுத்து முதல்வர் மகள் ஹர்ஷிதாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மெயில் குறித்து சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் மெயில் அனுப்பியவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :