வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (10:09 IST)

ரஷ்ய தாக்குதல்களின் வேகம் குறைந்துள்ளதாக யுக்ரேன் ராணுவம் தகவல்

யுக்ரேன் இராணுவம் மார்ச் 8 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 24:00 (22:00 GMT) முதல் கணக்கெடுத்துக் கொள்ளப்படும், அதன் சமீபத்திய "செயல்பாட்டுத் தகவலை" வெளியிட்டது.


அதில் ரஷ்ய படையெடுப்பின் 13 ஆம் நாளின் சுருக்கத்தை வெளியிட்டது. கடந்த 24 மணி நேரத்தில், "ரஷ்யா படையினரின் நடவடிக்கை குறைந்துள்ளது, மேலும் பொது மக்களின் உட்கட்டமைப்புகளை ஏவுகணை மற்றும் குண்டுகளால் தாக்குவதே அவர்களின் முதன்மையாக உள்ளது" என்று யுக்ரேனின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கீயவ், சுமி, கார்ஹிவ், மேரியோபோல் , மைகோலாயிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களை சுற்றி வளைத்து கைப்பற்றுவதில் ரஷ்யா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், ரஷ்யாவிற்கும், இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்திற்கும் இடையே நில வழித்தடத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அது கூறியது.

ரஷ்ய ராணுவம் தொடர்ந்து கணிசமான இழப்பை சந்தித்து வருவதாகவும், " குழாய்களின் வலையமைப்பை" அமைப்பதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அது கூறியது. இந்த அறிக்கை பிபிசியால் சரி பார்க்கப்படவில்லை.