1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (13:32 IST)

சிக்ஸர் - பௌண்டரி மழை; மேட்ச் வின்னரான வாட்சன் - 5 சுவாரஸ்ய தகவல்கள்

ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனுக்கு 36 வயதாகிறது. சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்டாலும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் 51 பந்தில் சதமடித்துள்ளார் வாட்சன். இந்த சீசனில் மட்டும் இரண்டு சதங்களை விளாசியுள்ளார் வாட்சன். ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு எதிரான போட்டியில் 57 பந்தில் 106 ரன்கள் குவித்தார். இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்கள்  குவித்துள்ளார் ஷேன் வாட்சன்.
 
நேற்று நடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் ஐதராபாத் அணியைச் சேர்ந்த புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரை  எதிர்கொண்டார். வாட்சன் ஒருகூட ரன் எடுக்கவில்லை. ஓவர் மெய்டனானது. 11-வது பந்தில் தான் முதல் ரன்னை எடுத்தார் வாட்சன். ஆனால் 51-வது பதில்  அவரின் ஸ்கோர் 100. நேற்றைய போட்டியின் நாயகனான ஷேன் வாட்சன் 11 பௌண்டரிகளையும் எட்டு சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
1. ஐபிஎல்லில் இதுவரை நான்கு சதங்கள் விளாசியுள்ளார். நான்கு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் கண்டுள்ளார்.
 
2. ஐபிஎல்லில் இரண்டு முறை தொடர்நாயகன் விருது பெற்றுள்ளார். 2008 மற்றும் 2013 ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் நாயகன் வென்றார் ஷேன் வாட்சன்.
 
3. ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று ஃபார்மெட்டிலும் சதமடித்த முதல் நபர் வாட்சன். ஆஸ்திரேலியாவுக்காக 59 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 190 ஒருநாள்  போட்டிகளில் விளையாடியுள்ளார். 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
 
4. வாட்சன் ஒரு ஆல்ரவுண்டர். வலது கை பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் வலது கை மிதவேகப்பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 291 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
5. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதமடித்த ஒரே கிரிக்கெட் வீரர் ஆனார் ஷேன் வாட்சன்.
 
''புவனேஷ்வர் குமார் அருமையாக பந்து வீசினார். முதல் பத்து ரன்கள் ரன்கள் எடுக்காததால் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விதத்திலாவது எடுக்கவேண்டும் என  நினைத்தேன் ஆனால் இரண்டு பௌண்டரிகள் அடித்தபிறகு என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது'' என ஐபிஎல் இறுதியாட்டத்தில் ஆட்டநாயகன் விருது  வாங்கிய பிறகு கூறினார் வாட்சன்.