1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (23:07 IST)

வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா

வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்டது அமெரிக்காபட 
ராணுவ விமானிகள் 'விண்ணில் பார்த்த விவரிக்க முடியாத பறக்கும் பொருட்களுக்கு' (unidentified flying objects) எந்த விளக்கமும் இல்லை என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
2004ஆம் ஆண்டு முதல் விண்ணில் விவரிக்க முடியாத நிகழ்வுகள் நடப்பதாக 144 முறை அறிக்கைகள் தரப்பட்டும், ஒரே ஒரு நிகழ்வை தவிற, இதுகுறித்து எந்த விளக்கமும் இல்லை என்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பெண்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
எனினும், பறக்கும் நிகழ்வுகள் வேற்றுகிரக வாசிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட முடியாது.
 
விண்ணில் அதி வேகமாக சில பொருட்கள் பறப்பதாக அமெரிக்க ராணுவம் பல முறை தெரிவித்ததையடுத்து இது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) வலியுறுத்தியது.
 
பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம், விண்ணில் அடையாளம் தெரியாத நிகழ்வு நடப்பது குறித்த அறிக்கைகளை ஆராய, குழு ஒன்றை பெண்டகன் அமைத்தது.
 
'வேற்று கிரக வாசிகள்' - விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா
பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
இந்த நிகழ்வுகளை "கண்டறிந்து, பகுப்பாய்வு செய்து மற்றும் பட்டியிலிடுவதே" இந்த குழுவின் வேலை. மேலும், விண்ணில் பறக்கும் பொருட்களின் "இயல்பு மற்றும் தோற்றம்" பற்றிய "நுண்ணறிவை பெறவும்" இந்தக் குழு அமைக்கப்பட்டது.
 
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பெண்டகன்
 
அறிக்கையில் புதிய தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா?
"விவரிக்க முடியாத வானியல் நிகழ்வை" பார்த்ததாக கூறப்பட்ட 144 நிகழ்வுகளில், பெரும்பாலனவை கடந்த 2 வருடங்களில் நிகழ்ந்துள்ளன. அதாவது அமெரிக்க கடற்படை இது தொடர்பாக ஒருதரப்பட்ட வழிமுறையை கொண்டுவந்த பின்பு பதிவானவை.
 
இதில் 143 நிகழ்வுகளில் "இந்த சம்பவங்களுக்கு குறிப்பிட்ட விளக்கங்கள் அளிக்க எங்கள் தகவல் தொகுப்பில் போதிய தகவல்கள் இல்லை" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், இவை வேற்று கிரக வாசிகள் இருப்பதாக விளக்கும் எந்த தெளிவான அறிகுறிகளும் இல்லை என்றாலும் அந்த கூற்றை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
 
ரஷ்யா அல்லது சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப கருவிகளாக இருக்கலாம், அல்லது ரேடார் அமைப்புகளில் பதிவாகும் பனிப்பாறைகள் போன்ற இயற்கையான தட்பவெட்ப நிகழ்வுகளாக இருக்கலாம் அல்லது அமெரிக்காவின் முன்னேற்றங்களுக்கான ரகசிய திட்டங்களாக இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
 
வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்டது அமெரிக்கா
 
ஆனால் ஒரேஒரு நிகழ்வில் மட்டும், "மிகுந்த நம்பிக்கையுடன்" அது "காற்று நிரப்பப்பட்ட மிகப் பெரிய பலூன்" என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
 
மேலும், இந்த நிகழ்வுகள் "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு சவால் விடுக்கும்" வகையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இந்த குழு இந்த நிகழ்வுகள் குறித்த மேலும் பல தகவல்களை திரட்ட அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது, ஆராய்ச்சியை மேலும் பரவலாக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
என்ன ஆதாரம் இருக்கிறது?
 
வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
 
விண்ணில் விவரிக்க முடியாத வானியல் நிகழ்வுகள் நடக்கும் காணொளிகளை அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏப்ரல் 2020ல் வெளியிட்டது. அந்த காணொளிகள் அமெரிக்க கடற்படையால் படம் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
கடந்த மாதம் சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சி சேனலில் பேசிய இரண்டு முன்னாள் கடற்படை விமானிகள் இதுகுறித்து விளக்கினர். அவர்கள் பசிஃபிக் பெருங்கடலுக்கு மேல் இருக்கும் போது தாங்கள் என்ன செய்தார்களோ அதாவது தங்கள் அசைவுகளை அப்படியே அவர்கள் எதிரில் மர்ம பொருள் ஒன்று செய்ததாக ஒருவர் கூறினார். மற்றொருவர் கூறுகையில், "சிறிய வெள்ளை டிக்-டேக் (mints) பொருள்" போல அது தோற்றமளித்ததாக குறிப்பிட்டார்.
 
"அந்த பொருள் மிக மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அது எந்தப்பக்கம் செல்கிறது. எந்தப் பக்கம் திரும்பும் என்பதை எங்களால் ஊகிக்க முடியவில்லை" என்று மற்றொரு நிகழ்வை நேரில் பார்த்த முன்னாள் கடற்படை விமானி ஆலக்ஸ் டிட்ரிச் பிபிசியிடம் தெரிவித்தார்.