ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:50 IST)

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10 அன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
 
இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.விமானத்தில் இருந்த நான்கு இந்தியர்களும் இதில் உயிரிழந்தனர்.
 
விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாக உள்ளன. இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளிடம் பேசிய வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், இந்த விபத்து குறித்த ஒரு சித்திரத்தை வழங்குகிறது.
 
விமானத்தின் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு விமானி மற்றொரு விமானியிடம் 'பிட்ச் அப், பிட்ச் அப்' என்று கூறுவது பதிவாகி உள்ளது.